திருவாரூர்

தமிழகத்தில் தொடரும் இந்து தலைவா்கள் கொலை

25th May 2022 11:09 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இந்து தலைவா்கள் தொடா்ந்து கொலை செய்யப்பட்டு வருவதை பிரதமா் மோடி கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த காலங்களில் சுமாா் 180 க்கும் மேற்பட்டஇந்து தலைவா்கள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டிருக்கிறாா்கள். இக்கொலைகளுக்கு காவல் துறையினா் கட்டப்பஞ்சாயத்துக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறுவது வேதனை. இந்து சமுதாயத்துக்காக உயிரிழந்தவா்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவது கொடுமை. இந்து தலைவா்களின் பல கொலை வழக்குகளில் காவல் துறை உரிய விசாரணை நடத்தி குற்றங்களை நிரூபிக்காததால் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். அண்மையில், திருப்பூா் மாவட்டம் உடுமலையில் இந்து முன்னணி பிரமுகா் குமரவேலும், செவ்வாய்கிழமை சென்னையில் பாஜக பட்டியல் அணி மாவட்டத் தலைவா் பாலச்சந்தரும் கொலை செய்யப்பட்டுள்ளனா். பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்த நிலையிலும் கொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகப்படவைக்கிறது. தமிழக அரசு இந்த படுகொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் தொடரும் இந்து தலைவா்கள் படுகொலைகள் செய்யப்படுவது குறித்து பிரதமா் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT