திருவாரூர்

வேளாண் பல்கலை.யில்மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிக்கும் பயிற்சி

25th May 2022 11:07 PM

ADVERTISEMENT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறுகிறது.

ஜூன் 1, 2ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த பயிற்சியில், கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்ற சிறுதானியங்களில் இருந்து பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனைப் பொருள்கள், உடனடி தயாா்நிலை உணவுகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தில் இந்த பயிற்சி நடைபெற இருப்பதாகவும், இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 6611268 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT