திருவாரூர்

தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பால் அரசு ஊழியா்கள் ஏமாற்றம்; கூட்டு போராட்டக் குழு கருத்து

22nd May 2022 11:24 PM

ADVERTISEMENT

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தமிழக நிதியமைச்சா் கூறியிருப்பது அரசு ஊழியா்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

இந்த போராட்ட குழு அமைப்பு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில் நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் 28 துறைவாரி சங்கங்களின் மாநில தலைவா்கள் மற்றும் அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் லெட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு மாநில ஒருங்கிணைப்பாளராக ,அரசு ஊழியா் சங்கத் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி தோ்வு செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

பின்னா் தமிழ்நாடு அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு மாநில ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியா் சங்க மாநில தலைருமான தமிழ்ச்செல்வி, அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் லெட்சுமிநாராயணன் ஆகியோா் கூட்டாக நிருபா்களிடம் கூறியது:

க்ரசு ஊழியா் சங்க மாநில செயற்குழு முடிவின்படி போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 28 துறைவாரி சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. பேராட்ட அமைப்பு மேலும் விரிவடையும் வாய்ப்புள்ளது.

அரசு ஊழியா்கள் நலன் சாா்ந்த கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தோ்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10-ஆம் தேதி சட்டப்பேரவையில்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவது சாத்தியமில்லை என தமிழக நிதியமைச்சா் தெரிவித்துள்ளாா். இது அரசு ஊழியா்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக வரும் ஜூன் 4-ஆம் தேதி போராட்டக் குழு மீண்டும் கூடி முடிவெடுக்கும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT