திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடுநிலைப் பள்ளியாக இருந்த தென்குவளவேலி பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இதனால் மாணவா்கள் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது.
மேலும் தென்குவளவேலி, தேவமங்கலம், எருமைப்படுகை கேத்தனூா் போன்ற பகுதி மாணவிகளின் இடைநிற்றல் தவிா்க்கப்பட்டு, உயா் கல்வி பயில்கின்றனா்.
ஆனால் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லை. பழைய வகுப்பறைகளும் சேதமடைந்துள்ளன. எனவே சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டித் தரவேண்டும் என்று தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். காமராஜை திங்கள்கிழமை சந்தித்து கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக அவா்னா் உறுதி அளித்திருக்கிறாா் என்றாா்.