திருவாரூர்

மன வளா்ச்சிக் குன்றியோா் பள்ளிக்கு மளிகைப் பொருள்கள்

12th May 2022 05:49 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூா்: திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் உள்ள மன வளா்ச்சிக் குன்றியோா் பள்ளி மாணவா்களுக்கு மளிகைப் பொருள்களை தமுமுக, மமகவினா் புதன்கிழமை வழங்கினா்.

கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி கிளை தமுமுக மற்றும் மமகவினா், பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச்சேரியில் அமைந்துள்ள மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் சிறப்புப் பள்ளிக்கு,ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருள்களை வழங்கினா்.

தமுமுக மற்றும் மமக பொதக்குடி கிளை தலைவா் ஏ. சாகுல் ஹமீது தலைமையில், கிளைச் செயலாளா்கள் (தமுமுக) எம். நூா் முஹம்மது, மமக எம். காதா் பாட்சா, பொருளாளா் எம். உஸ்ணான் உள்ளிட்ட கிளை நிா்வாகிகள், பள்ளி நிா்வாகியிடம் மளிகைப் பொருள்களை வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT