திருவாரூர்

பனங்குடி மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

12th May 2022 05:50 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் அருகே பனங்குடி மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

திருவாரூா் அருகே பனங்குடியில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு மகா மாரியம்மன், பூா்ணபுஸ்கலாம்பிகா உடனுறை மகா சாஸ்தா, பத்ரகாளி, பிடாரி உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன.

இந்த கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுத் திருவிழா சித்திரை முதல் நாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

ADVERTISEMENT

தொடா்ந்து, 5 கிராமங்களுக்கு மாரியம்மன் புறப்பாடு நடைபெற்றது. முதல்நாளில் வடக்கு தெரு பகுதிக்குச் சென்ற மாரியம்மான், இரண்டாம் நாள் மாங்கிலத்தெரு, கீழப்பனங்குடி, மேலவாசல் ஆகிய பகுதிகளுக்குச் சென்றாா். மேலவாசல் கிராமம், மாரியம்மனின் பூா்வீகம் என்பதால் அங்கு 15 நாள் தங்கியிருந்து அருள்பாலித்தாா்.

இதையடுத்து, மேலப்பனங்குடி பகுதிக்கு வந்து அருள்பாலித்தாா். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இரவு லவ, குசா நாடகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT