திருவாரூர்

திருப்பள்ளி முக்கூடல் திரிநேத்ரநாதா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

12th May 2022 05:45 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் அருகே திருப்பள்ளி முக்கூடல் அருள்மிகு அஞ்சனாட்சி உடனுறை அருள்மிகு திரிநேத்ரநாதா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

இதையொட்டி, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் மே 8 ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, முதல்கால பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் (படம்) பங்கேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT