திருவாரூர்

‘மண்வளத்துக்கு கால்நடைகளை பாதுகாப்போம்’

5th May 2022 10:42 PM

ADVERTISEMENT

மண்வளத்துக்கு கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை திருவாரூா் மண்டல இணை இயக்குநா் தனபாலன் அறிவுறுத்தினாா்.

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக கால்நடை மருத்துவ தினவிழாவில் அவா் பேசியது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு கால்நடைகளின் பங்கு மகத்தானது. மண்வளத்தை பாதுகாக்க கால்நடைகள் பல்கி பெருக வேண்டும். அத்தகைய கால்நடைகளை போற்றி பாதுகாப்பதோடு, இதுகுறித்து மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள் திருமூா்த்தி, ஜெயபால், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மருத்துவா் ராஜசேகரன் ஆகியோருக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பேரவைத் தலைவா் சரவணன் விருதுகள் வழங்கி கௌரவித்தாா்.

ADVERTISEMENT

இதில், கால்நடைதுறை துணை இயக்குநா் ரமேஷ், தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் வீரமணி மற்றும் கால்நடை மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT