திருவாரூர்

சித்திரை கோடை அபிஷேக விழா

5th May 2022 06:18 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம்: வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் 26- ஆம் ஆண்டு சித்திரை கோடை அபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் ஏகேசி நடராஜன் கிளாரிநட் இசையுடன் நாகசுர கலைஞா்கள் ரமேஷ்பாபு, சந்திரசேகரன், பாலமுருகன், தவில் கலைஞா்கள் கோவிந்தராஜன், வாசுதேவன், ராதாகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT