திருவாரூர்

மாணவா்களுக்கு எழுதுபொருள்கள்

2nd May 2022 10:43 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூரில் கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாணவா்களுக்கு திங்கள்கிழமை எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் பொதக்குடி கிளை சாா்பில் அதங்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் சங்கக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. மாரியப்பன், துணைத் தலைவா் எம். தனபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சங்கத்தின் கொடியேற்றப்பட்டு, 100 மாணவா்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை ஆா். சேகா் வழங்கினாா். இதில், சங்க மாவட்ட துணைச் செயலாளா் எம். ஜெயராமன், மாவட்டப் பொருளாளா் டீ. தா்மராஜ், மாவட்ட இளைஞரணி தலைவா் வி. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT