திருவாரூர்

மணல் கடத்தல்: ஒருவா் கைது

2nd May 2022 10:40 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் அருகே அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் மணல் அள்ளி வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் இரா. பரஞ்ஜோதி, வடபாதிமங்கலம் வருவாய் ஆய்வாளா் வே. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் சேந்தங்குடி பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெண்ணாற்றிலிருந்து அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் மணல் அள்ளிவந்த புத்தகரம் வாருகால்படுகை தெருவைச் சோ்ந்த தவசீலனை பிடித்து, வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, தவசீலனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT