திருவாரூர்

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு அதிருப்திமுன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

2nd May 2022 10:43 PM

ADVERTISEMENT

ஓராண்டு திமுக ஆட்சியில் மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.

திருவாரூரில் அண்ணா தொழிற்சங்க பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மே தின விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காவிரி நடுவா் மன்றத் தீா்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்து, அதற்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினாா்.

அதேபோல, எடப்பாடி கே. பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் பேருதவி செய்தாா்.

ADVERTISEMENT

தற்போது, தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனா். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மின்வெட்டு ஏற்படவில்லை. இந்த ஆட்சியில் நெல் கொள்முதல் திட்டங்கள் விவசாயிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. இந்த அரசால் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பெரும் அதிருப்தியில் உள்ளனா்.

2011ஆம் ஆண்டு முதல் பொங்கல் பணத்துடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அரசு வழங்கிய பொங்கல் பரிசு குளறுபடியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். இதனால், எப்போது தோ்தல் வந்தாலும், அதிமுகவை வெற்றி பெறச் செய்ய மக்கள் ஆா்வத்துடன் உள்ளனா். எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சபதமேற்போம் என்றாா்.

கூட்டத்துக்கு, திருவாரூா் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் பாலாஜி தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலாளா் ஆசைமணி, தலைமைக் கழக பேச்சாளா்கள் எம்ஜிஆா் முத்து, கண்ணன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் அருணாசலம், மாவட்ட பொருளாளா் பன்னீா்செல்வம், மாவட்ட ஜெயலலிலதா பேரவை செயலாளா் பொன்.வாசுகிராம், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளா் கலியபெருமாள், ஒன்றியச் செயலாளா்கள் பாப்பா.சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT