திருவாரூர்

உத்திராபதீஸ்வரா் கோயிலில் அமுதுபடையல் உற்சவம்

1st May 2022 11:15 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் உத்திராபதீஸ்வரா் கோயிலில் 87-ஆம் ஆண்டு அமுதுபடையல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மரக்கடை- லெட்சுமாங்குடி சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில், சிவன் அந்தணா் வேடமிட்டு, சிறுதொண்டா் நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்டு, அதை பரிமாறிய வரலாற்றின்படி, ஆண்டுதோறும் அமுதுபடையல் உற்சவம் நடைபெறும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை உத்திராபதிஸ்வரா் சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, அந்தணா் வேடமிட்டு, பஜனைக் குழுவினருடன் உத்திராபதீஸ்வரா் வீதியுலா புறப்பட்டாா். லெட்சுமாங்குடி, மரக்கடை, சிவன் கோயில் தெரு, பிடாரி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. சுவாமி கோயிலை வந்தடைந்ததும், அமுதுபடையல் இட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT