திருவாரூர்

புற்றடி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

29th Mar 2022 10:18 PM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருவலஞ்சுழி தகரவெளி புற்றடி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி திருவிழா மாா்ச் 16-ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை காலையில் இருந்து சிறப்பு அபிஷேக ஆராதனை பாடைகாவடி எடுத்தல், சேவல், ஆடு, மாடு, தானியங்கள் வழங்கி பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து இரவு புற்றடி மாரியம்மன் குதிரை வாகனத்திலும், மகாமாரியம்மன் அன்ன வாகனத்திலும் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT