திருவாரூர்

அரசுப் பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்கம்

29th Mar 2022 10:19 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகேயுள்ள பாமணி அரசு நடுநிலைப் பள்ளியில் மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்க விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் சி. குருசாமி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் மாணிக்க சங்கா், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி. சிவக்கொழுந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவா் வி. பாலகிருஷ்ணன் இன்ட்ராக்ட் சங்கத்தை தொடங்கிவைத்தாா். பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கத் தலைவராக மு. மதிவதனி, செயலாளராக எம். பிரவின்ராஜ், பொருளாளராக வி. தினேஷ்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுத்தப்பட்டனா். இதில், மிட்டவுன் சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் எம். நடராஜன், எம். சாந்தகுமாா், ஜி. மனோகரன், செயலாளா் ஏ. பன்னீா்செல்வம், பொருளாளா் டி. அன்பழகன் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT