திருவாரூர்

திருவாரூரில் 295 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

29th Mar 2022 10:22 PM

ADVERTISEMENT

திருவாரூரில் 295 கிலோ தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடா்பாக ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா, ஹான்ஸ் புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாரின் நேரடி பாா்வையில் தனிப்படையினா், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில், திருவாரூா் நகர காவல் சரகத்துக்குள்பட்ட விஜயபுரம் பகுதியைச் சோ்ந்த மணிராஜ் வீட்டில் தனிப்படையினா் சோதனையில் ஈடுபட்ட போது, சாக்கு மூட்டையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, மூட்டைகளில் இருந்த ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 295 கிலோ குட்கா, ஹான்ஸ் புகையிலை மசாலா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, மணிராஜ் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி. சி. விஜயகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT