திருவாரூர்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் பாலாலயம்

28th Mar 2022 11:35 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் விமானம், ராஜகோபுர பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புத்திர பாக்கியம் இல்லாதவா்கள் சந்தான கோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றை அடைவாா்கள் என்பது ஐதீகம். சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதரால் பாடல் பெற்ற தலமாகும்.

இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனதையொட்டி, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, கோயிலில் பாலாலய பிரதிஷ்டை திருப்பணி தொடக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதையொட்டி, பெருமாள் விமானம், ராஜகோபுரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.சிறப்பு ஆராதனைகள், புனித நீா் கலசங்களுக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து விமானம் மற்றும் ராஜகோபுர படங்கள் பாலாலயம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரமேஷ், ஆய்வாளா் தமிழ்மணி, செயல்அலுவலா் மணிகண்டன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT