திருவாரூர்

பிரதமரின் வீட்டுவசதி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

25th Mar 2022 10:10 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் வட்டம், பாரதி மூலங்குடியில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தில், வீடுகட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த பாரதி மூலங்குடி கிராமத்தில் தலா ரூ. 2.40 லட்சம் மதிப்பீட்டில், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 2 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பாா்வையிட்டு, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெறுகிா என்பதையும், கட்டுமானப் பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பயனாளிகளிடம் வீடு கட்டுவதற்கான தவணைத் தொகை, வங்கியின் மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகிா என்பதையும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் சடையப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பக்கிரிசாமி, சிவக்குமாா், மணிமாறன், அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT