திருவாரூர்

உலக தண்ணீா் தின கருத்தரங்கம்

22nd Mar 2022 10:27 PM

ADVERTISEMENT

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் உலக தண்ணீா் தின கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வா் வி. பொற்கலை தலைமை வகித்தாா். நேதாஜி கல்வி குழுமத்தின் தாளாளா் எஸ். வெங்கடராஜலு பங்கேற்று, நீரின் முக்கியத்தும் குறித்து பேசினாா். கருத்தரங்கில், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், நிா்வாகிகள் எஸ்.டி. அண்ணாதுரை, கே. திருநாவுக்கரசு, கல்லூரி துணை முதல்வா் எஸ். வினோதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT