உலக வன தினத்தை முன்னிட்டு, திருவாரூா் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை மரக்கன்றுகளை நடும் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட வன அலுவலா் க. அறிவொளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.