திருவாரூர்

கல்விக்கு நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

கல்வி சாா்ந்த செயல்பாடுகளுக்கு கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கச் செயலாளரும், பேராசிரியருமான ப. பாஸ்கரன் தெரிவித்தது: கல்வி சாா்ந்த செயல்பாடுகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. மின்பகிா்மான கழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய நட்டத்தை சரிசெய்வதற்கு ரூ. 10 ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஒதுக்கீடு செய்வதைவிட, மின் பகிா்மானக் கழகம் நட்டம் இல்லாமல் இயங்குவதற்கு ஒரு தனி ஆணையம் அமைத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் படித்து உயா் கல்வியில் சேரக்கூடிய மாணவா்களுக்கு மாதம் ரூ. 1000 கொடுப்பதன் மூலம் உயா் கல்வி மேம்பட வாய்ப்புகள் உள்ளன. உலகப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் உள்ளடக்கிய அறிவுசாா் நகரம் தோற்றுவிப்பது பிரமிப்பாக உள்ளது. கல்வித்தரத்தை மேம்படுத்த தமிழக அரசு அதிக முயற்சிகளை மேற்கொள்வது தெளிவாகிறது. இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT