திருவாரூர்

மீனவா் நலன்களை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

மீனவா் நலன்களை பாதுகாக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மீனவா் தொழிலாளா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும், உற்பத்தி விலையிலேயே மீனவா்களுக்கு டீசல் வழங்கவேண்டும், மீனவப் பெண்களுக்கு குடிசைத் தொழில் ஏற்படுத்தி வங்கிக் கடன் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளா் சி. செல்வம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT