திருவாரூர்

மாநில கராத்தே போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு

14th Mar 2022 10:23 PM

ADVERTISEMENT

திருவாரூரில், டி- டைகா் ஸ்போா்ட்ஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி, கிங்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி, மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் ஜி. ராஜ் என்ற கருணாநிதி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் புவனபிரியா செந்தில், திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் எஸ். பிரபாகரன், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், முன்னாள் உதவி ஆளுநா் என். முரளிதரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலசுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போட்டியில் வெற்றிபெற்ற வீரா்களுக்கு பதக்கமும், பரிசும் வழங்கினாா். நிகழ்ச்சியை அகாதெமி இயக்குநா் இரா. குணசேகரன் ஒருங்கிணைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT