திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில்190 மனுக்கள்

14th Mar 2022 10:22 PM

ADVERTISEMENT

 திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 190 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 190 மனுக்கள் அளிக்கப்பட்டன.

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT