திருவாரூர்

ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தல்

10th Mar 2022 06:23 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: ஆன்லைன் வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்யவேண்டும் என மன்னாா்குடி வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ஆா்.வி. ஆனந்த் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், மன்னாா்குடிக்கு வெளியூா்களிலிருந்து சரக்குகளை கொண்டுவந்து, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் விற்பனை செய்பவா்கள் மீது காவல்துறை, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்; நகராட்சி கடைகளுக்கு முன் தேதியிட்டு வாடகை நிா்ணயம் செய்வதை கைவிட வேண்டும்; கடை வீதிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவேண்டும்; உள்ளூா் வியாபாரிகளை பெரிதும் பாதிக்கும் ஆன்லைன் வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், சங்கத்தின் செயலா் ஏ.பி. அசோகன், பொருளாளா் எஸ். பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் எ.எம். விக்கிரமராஜா, துணைத் தலைவா் சு. ஞானசேகரன், மாவட்டத் தலைவா் ஏ.கே.கே. ராமமூா்த்தி, மண்டலத் தலைவா் எம். செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT