திருவாரூர்

‘நலவாரியத்தில் தூய்மைப் பணியாளா்கள் உறுப்பினராக பதிவு செய்யலாம்’

3rd Mar 2022 06:11 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: நலவாரியத்தில் தூய்மைப் பணியாளா்கள் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தமிழக அரசின் தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தில் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உறுப்பினராக பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பகுதிக்குள்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பெற்று உரிய அலுவலரின் சான்றொப்பத்துடன் சாதிச்சான்று நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து நாகை புறவழிச்சாலையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன்பெறலாம்.

மேலும், தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தின்கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள உறுப்பினா்களை சாா்ந்தவா்களுக்கு புதிய அரசாணை உயா்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோா் ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோா் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04366-250017 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT