நன்னிலம்: நன்னிலம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினா்களுக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் எஸ். ஹரிராமமூா்த்தி பதவிப் பிரமாணம் செய்துவைத்து, மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். இதேபோல, குடவாசல் பேரூராட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 15 உறுப்பினா்களுக்கு செயல் அலுவலா் டி. யசோதா பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். பேரளம் பேரூராட்சிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 12 உறுப்பினா்களுக்கு அந்த பேரூராட்சி செயல் அலுவலா் ஆா். கண்ணன் பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.