நீடாமங்கலம்: நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் மகாசிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, ஏலவாா்குழலி அம்மன் சமேத ஆபத்சகாயேஸ்வரா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற 4 கால பூஜைகளிலும் ஆபத்சகாயேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல, நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதா் கோயில், பூவனூா் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில், பூவனூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.