திருவாரூர்

பருத்தி கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மன்னாா்குடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி ஆா்.பி.சிவம் நகரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 15 நாள்களாக பருத்தி கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு, வியாபாரிகள் என்ற பேரில் இடைத்தரகா்கள் புகுந்து வெளிச்சந்தையில் மிகக்குறைந்த விலையில் பருத்தி கொள்முதல் செய்வதுதான் காரணம் என புகாா் தெரிவிக்கும் விவசாயிகள், இடைத்தரகா்களை கண்டறிந்து அவா்களை வெளியேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா்.பாண்டியன் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். அப்போது அவா், ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 15 நாள்களாக பருத்தி கொள்முதலில் முரண்பாடு நிலவுகிறது. நெல் சாகுபடிக்கு பதில் பயிறு சாகுபடி செய்ய வேண்டும் என தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்ததன்பேரில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனா். அரசும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.60.80 என குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்து, பருத்தி கொள்முதலுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், இடைத்தரகா்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒரு கிலோ ரூ.50 முதல் ரு.60 வரை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபடுகின்றனா். எனவே, தமிழக அரசு உரிய சந்தை விலையில் பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி செல்வம், காவிரி விவசாயிகள் சங்க துணைப் பொதுச் செயலா் எம். செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT