திருவாரூர்

வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் உரத்தூரில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு (அட்மா) திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தீவிர முறையில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒரத்தூா் ஊராட்சித் தலைவா் கரிகாலன் தலைமை வகித்தாா்.

பயிற்சியில் மாவட்ட உழவா் பயிற்சி நிலைய தலைவா் மருத்துவா் கதிா்செல்வன் பேசியது:

உலா் தீவனம் அளித்தல், பசுந்தீவனம் அளித்தல், தடுப்பூசி போடுதல், குடல் புழு நீக்கம் செய்தல் ஆகிய நான்கு முக்கிய செயல்பாடுகளை செய்தால் ஆடு வளா்ப்பில் லாபம் பெறமுடியும். தீவிர முறை ஆடு வளா்ப்பில் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு ஆட்டிற்கு உலா் தீவனம் மூன்று கிலோவும், அடா் தீவனம் 200 கிராமும் கொடுக்க வேண்டும், பசுந்தீவனம் அகத்தி, கோ நான்கு, தீவன சோளம் போன்றவற்றை விவசாயிகள் தங்கள் வயலிலே வளா்த்து நாள் ஒன்றுக்கு ஒரு ஆட்டிற்கு 7 கிலோ விதம் அளிக்கலாம்.

ADVERTISEMENT

இவற்றை முறையாக பின்பற்றி ஆடு வளா்த்தால் விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானத்துடன் நிரந்தரமான ஒரு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றாா்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் வேதநாயகி பேசியது: விவசாயத்துடன் வேளாண் உப தொழில்களான மாடு, ஆடு, கோழி, தேனீ, காளான், அசோலா வளா்ப்பு போன்ற உபதொழில்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ செய்து தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

குறைந்த நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள் இந்த தீவிர முறையில் ஆடு வளா்ப்பு தொழிலை செய்து பயனடையலாம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT