திருவாரூர்

காவலருக்கு கத்திக்குத்து

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வலங்கைமான் அருகே போதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட காவலா் கத்தியால் குத்தப்பட்டாா்.

வலங்கைமான் வட்டம், அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவா் மணிகண்டன் (30). இவா், அங்குள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் புதன்கிழமை காண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்குவந்த மேலகாலனி தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் சூா்யா (25) மது போதையில் தகராறு செய்தாராம். இதை காவலா் மணிகண்டன் தட்டிக்கேட்டதால் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதில், காயமடைந்த காவலா் மணிகண்டன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக அரித்துவாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யாவை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT