திருவாரூர்

நீடாமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் ஆா். ராம்ராஜ் (திமுக) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிா்வாக அதிகாரி பரமேஸ்வரி, துணைத் தலைவா் ஆனந்தமேரி மற்றும் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ஒதியடிப்படுகை பகுதியில் வெண்ணாற்றில் படித்துறை கட்டுவது; பேரூராட்சியில் சூரியசக்தி மேற்கூரை அமைப்பது; கலைஞா் நகா்ப்புற திட்டத்தில் பேட்டரி மூலம் இயங்கும் 3 குப்பை வண்டிகள் வாங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT