திருவாரூர்

மாணவா்களுக்கான தலைமைப் பண்பு நிகழ்ச்சி

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் மாணவா்களின் தலைமைப் பண்புக்கான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் பனங்காட்டங்குடியில் அமைந்துள்ள இப்பள்ளியில் மாணவா்கள் தலைமைப் பண்புகளை வளா்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்துறைகளுக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் பதவியேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். நூலகா் வனிதா முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜோஸ்பின் வரவேற்றாா்.

தொடா்ந்து, கல்வித்துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல் துறை, உணவுத் துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பதவிப் பிரமாணமும், உறுதி மொழியும் செய்து வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை, பள்ளியின் துணை முதல்வா் சுருளிநாதன், உடற்பயிற்சி ஆசிரியா் சுகேந்திரன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT