திருவாரூர்

அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணி

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் இயக்கம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை ஊழியா்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாவட்டத் தலைவருமான மணிவண்ணன் தலைமை வகித்தாா். தலைமை மருந்தாளுநா் கருணாநிதி, மருந்தாளுநா்கள் பரமேஸ்வரி, சதாசிவம், இளஞ்சேரன், ஆய்வகநுட்புநா் ராஜலட்சுமி, பாரதி, கண் மருத்துவ உதவியாளா் ராஜலட்சுமி, நுண்கதிா் வீச்சாளா் ராஜேஸ்வரி, எம்ஆா்பி செவிலியா் சுதா, அலுவலகப் பணியாளா் ஜெயராமன், தலைமைச் செவிலியா் பத்மினி உள்ளிட்டோா் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT