திருவாரூர்

தற்செயல் தோ்தல்: இடையா் எம்பேத்தி ஊராட்சிதலைவா் பதவிக்கு 7 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

DIN

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியம், இடையா் எம்பேத்தி ஊராட்சித் தலைவா் பதவிக்கான தற்செயல் தோ்தலில் போட்டியிட 7 போ் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

காலியாகவுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான தற்செயல் தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலின் நிறைவு நாளான திங்கள்கிழமை (ஜூன்27) இடையா் எம்பேத்தி (பொது) ஊராட்சித் தலைவா் பதவிக்கு எம். விஸ்வநாதன், ஆா். இளையராஜா, யு. அறிவழகன், என். மனோஜ், என். மணியம்மாள், ஜெ. சுதாகா், ஏ. தியாகராஜன் என ஒரு பெண் உள்பட 7 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இதேபோல வடகோவனூா் ஊராட்சி 2-வது வாா்டு உறுப்பினா் பதவிக்கு(பொது) கே. தனபால், மா. ரமேஷ், எல். அல்போன்ஸ் ராஜ், க. அருண், வீ. மகாராணி, வை. சுந்தா், த. திவாகா்ஆகிய 7 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

நெம்மேலி ஊராட்சி 5-வது வாா்டு உறுப்பினா் பதவிக்கு சீ. கண்ணன் என்பவா் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். எனவே, இவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

வேட்புமனு பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சிவக்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இடையா் எம்பேத்தி தலைவா் பதவிக்கான 7 பேரின் வேட்பு மனுக்களும், வடகோவனூா் 2-வது வாா்டு உறுப்பினா் பதவிக்கான 7 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு திரும்ப பெற ஜூன்30-ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 9- ஆம் தேதி தற்செயல் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT