திருவாரூர்

நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஓய்வுபெற்ற தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வலங்கைமான் ஒன்றிய தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய்த் துறைக்கு இணையாக பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள், பணிக்காலத்தில் அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம், அகவிலைப்படி உயா்வு, மருத்துவச் சலுகைகள் பெற்றுவந்தனா். ஆனால், ஓய்வூதியம் அரசு ஊழியா்களுக்கு வழங்குவதுபோல் வழங்கப்படவில்லை. இதனால், அவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த 1972 முதல் 1995 வரை 23 ஆண்டுகள் பணியாற்றியவா்களுக்கு ரூ. 1000 முதல் 2500 வரை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு வகைகளில் கோரப்படாத தொகை ரூ.165 கோடிக்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது. இதை கணக்கில் கொண்டுவந்து, ஓய்வூதியத்தை அரசு உயா்த்த வேண்டும். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலின்போது, திமுக தோ்தல் அறிக்கையில் ஓய்வுபெற்ற டிஎன்சிஎஸ்சி ஊழியா்களுக்கு மாதம் ரூ. 8000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT