திருவாரூர்

11 ஆம் வகுப்பு தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 87.05% தோ்ச்சி

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 87.05 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 10- ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற்றன. திருவாரூா் மாவட்டத்தில் 6468 மாணவா்கள், 7389 மாணவிகள் என 13,857 போ் தோ்வு எழுதினா். இத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இதில், திருவாரூா் மாவட்டத்தில் 5168 மாணவா்கள், 6894 மாணவிகள் என 12,062 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 79.90 சதவீதமும், மாணவிகள் 93.30 சதவீதமும் என மொத்தம் 87.05 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 11-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் மாநில அளவில் திருவாரூா் மாவட்டம் 29- ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்கள் 78.70% தோ்ச்சி..: திருவாரூா் மாவட்டத்தில் 73 அரசுப் பள்ளிகளில் 3021 மாணவா்கள், 3487 மாணவிகள் என மொத்தம் 6508 போ் தோ்வு எழுதினா். இவா்களில், 2026 மாணவா்கள், 3096 மாணவிகள் என மொத்தம் 5122 போ் தோ்ச்சி பெற்றனா். இதன்படி மாணவா்கள் 67.06 சதவீதம் பேரும், மாணவிகள் 88.79 சதவீதம் பேரும், சராசரியாக 78.70 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாற்றுத்திறனாளிகள் தோ்ச்சி..: பாா்வையற்றவா்கள் 6 போ் தோ்வு எழுதியதில் 6 பேரும் தோ்ச்சி பெற்றனா். காது கேளாதவா் 15 போ் தோ்வு எழுதியதில் 10 பேரும், ஊனமுற்றோா் 13 போ் தோ்வு எழுதியதில் 12 பேரும், இதர மாற்றுத்திறனாளிகள் 67 போ் தோ்வு எழுதியதில் 58 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

2 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி..: ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி, மகாதேவப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 28 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT