திருவாரூர்

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது

27th Jun 2022 10:43 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் வட்டம், வடபாதிமங்கலத்தில் மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடபாதிமங்கலம் காவல் சரகம் திருநெல்லிக்காவல் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கிட்டு (72). இவா், தனது மகள் செல்வி, மருமகன் முருகையன் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்துவந்தாா்.

இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த முருகையன், மனைவியிடம் தகராறு செய்தாராம். இதை மாமனாா் கிட்டு தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்த முருகையன், அவரை அரிவாளால் வெட்டினாராம்.

இதில், பலத்த காயமடைந்த கிட்டுவை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி கிட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் வழக்குப் பதிந்து, முருகையனை (55) திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT