திருவாரூர்

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

27th Jun 2022 10:42 PM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து நன்னிலம், கூத்தாநல்லூா் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நன்னிலம் வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் திருவாரூா் மாவட்ட பொதுச் செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் வெங்கடேசன், முனிஐயா, நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஈஎம்ஏ. ரஹீம், நகரத் தலைவா் அப்துல் ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, கூத்தாநல்லூா் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் லெட்சுமாங்குடி பாலம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நகரத் தலைவா் எம். சாம்பசிவம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் பெ. முருகேசு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, ராணுவத்தில் பணியாற்ற 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்திப் பேசினாா். இதில், காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.சமீா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எம். சிவதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT