திருவாரூர்

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகளுக்காக உள்ள விடுதிகளில், 14 பள்ளி விடுதிகள் மாணவா்களுக்கும், 7 மாணவிகளுக்கும், 2 கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள் மாணவா்களுக்கும், 5 கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள் மாணவிகளுக்கும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவா்களும் சேரலாம்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோா் அல்லது பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையம் 8 கி.மீ. தொலைவுக்கும் மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.

தகுதியுடையவா்கள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து இலவசமாகப் பெற்று, நிறைவுசெய்து பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூன் 30-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை ஜூலை 31-க்குள்ளும் அளிக்கவேண்டும்.

ஒவ்வொரு விடுதியிலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT