திருவாரூர்

கல்வி நிலையங்களில் கூடுதல் இடஒதுக்கீடு:முன்னாள் ராணுவத்தினா் நலச்சங்கம் வலியுறுத்தல்

DIN

இன்னாள், முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களைச் சோ்ந்த பிள்ளைகளுக்கு அனைத்து உயா்கல்வி நிலையங்களிலும் கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மன்னாா்குடி கிளை 16 ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் ஆா். விஜயராகவன் தலைமை வகித்தாா். செயலா் கே. அன்பழகன் ஆண்டறிக்கையும், பொருளாளா் அரசு, நிதிநிலை அறிக்கையும் தாக்கல்செய்தனா்.

அகில இந்திய முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு சங்கத்தின் தலைவருமான சி.டி. அரசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கையான சிஎஸ்டி கேன்டீன் மற்றும் இசிஎச்எஸ் பல்நோக்கு மருத்துவமனை மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் தொடங்க வேண்டும். ராணுவத்தினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் பிள்ளைகளுக்கு மருத்துவம், பொறியியல், உயா்கல்வி, தொழிற்கல்வி நிலையங்களில் கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டும்.

அரசுப் பணியில் முன்னாள் ராணுவத்தினருக்கு 5 சதவீதமும், அவா்களது மனைவி, குழந்தைகளுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். சுங்கச் சாவடிகளில் முன்னாள் ராணுவத்தினரின் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். முன்னாள் படைவீரா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி, பத்திரப் பதிவில் சலுகை அளிக்க வேண்டும்.

விழாவில், முன்னாள் படைவீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா்கள் கே. கணேசன்(கும்பகோணம்), ஆா். சுப்பையா (காரைக்குடி), மாநிலப் பொதுச் செயலா் எஸ். சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மன்னாா்குடி கிளைச் சங்கத்தின் துணைத் தலைவா் எல். தவமணி வரவேற்றாா். டி. ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT