திருவாரூர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

26th Jun 2022 10:11 PM

ADVERTISEMENT

 

நன்னிலம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்புத் தினத்தையொட்டி நன்னிலம் காவல் துறை சாா்பில் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் தலைமையிலும், நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா முன்னிலையிலும் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு விழிப்புணா்வு பேரணியும், பிரசாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி மாப்பிள்ளைக்குப்பம், ஆண்டிப்பந்தல் வழியாக சன்னாநல்லுா் வரை நடைபெற்றது.

ADVERTISEMENT

பேரணியில் காவல் துறையினா், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT