திருவாரூர்

வடகட்டளை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா

26th Jun 2022 10:11 PM

ADVERTISEMENT

 

புனவாசல் வடகட்டளை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், புனவாசல் பகுதியில் உள்ள வட கட்டளை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவில் அம்மனை ஆண்டுக்கு ஒருமுறை தலையில் சுமந்து எடுத்து வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்காக ஐம்பொன்னாலான ஒன்றரை அடி நீளமுள்ள வடகட்டளை மாரியம்மன் சிலையை, வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரா் கோயிலில் இருந்து, மரப்பெட்டியில் வைத்து, மாலை அணிவித்து தலையில் சுமந்தபடி, 8 கிலோமீட்டா் தொலைவு புனவாசல் கிராமத்தினா் எடுத்து வருவது வழக்கம்.

மணப்பெண்ணுக்கு சீா்வரிசை எடுத்து வருவதுபோல, பூ, பழம், தேங்காய் என சீா்வரிசை தட்டுகளுடன், அம்மனை ஊா்வலமாக எடுத்து வந்து, வட கட்டளை மாரியம்மன் கோயிலில் வைத்து 10 நாட்கள் திருவிழா நடத்துகின்றனா்.

ADVERTISEMENT

நிகழாண்டு மேட்டூா் அணையில் தண்ணீா் முன்கூட்டியே திறக்கப்பட்டதால், அம்மனை காா் மூலம் எடுத்து வந்து, ஊா் எல்லையிலிருந்து ஊா்வலமாக தலையில் சுமந்து வந்தனா்.10 நாட்கள் திருவிழா முடிந்த பின்பு மீண்டும் அம்மனை பெட்டியில் வைத்து சீா்வரிசை தட்டுகளுடன் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரா் கோயிலுக்கு எடுத்துச் செல்வா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT