திருவாரூர்

காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

26th Jun 2022 10:11 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் அக்னிப்த் திட்டத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டையில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பரவாக்கோட்டை பிரதான சாலை காமராஜ் பவன் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச்செயலா் அன்பு வே.வீரமணி, வட்டாரத் தலைவா் எஸ்.எஸ். செல்வராஜ், கிளை கமிட்டி தலைவா் எஸ்.எஸ்.சஞ்சய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி. குணசேகரன், வட்டார விவசாயணி தலைவா் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT