திருவாரூர்

கூத்தாநல்லூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக்க விழிப்புணர்வு முகாம் 

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக்க பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, எனது குப்பை, எனது பொறுப்பு என்ற உறுதிமொழிக்கேற்றபடி, நகரம் முழுக்க நடத்த பட்டு வரும் விழிப்புணர்வு முகாமிற்கு, நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு.சுதர்ஸன், ஆணையர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து, நகர மன்றத் தலைவர் பாத்திமா பஷீரா கூறியது. தமிழக முதல்வர் அறிவிப்பின் படி, கூத்தாநல்லூர் நகராட்சியில், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. நகரப் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வைத்திருக்க வேண்டும்.

நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உங்களின் வீட்டிற்கே வந்து பிரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை பெற்றுக் கொள்வார்கள். குப்பைகளை பொது இடங்களிலோ, சாலைகளிலோ கொட்ட வேண்டாம். கூத்தாநல்லூர் நகரத்தை தூய்மையான, குப்பையில்லா நகரமாக உருவாக்குவோம். எனது குப்பைகள், எனது பொறுப்பு என உறுதி ஏற்றுக் கொள்வோம். 
மேலும், நகரம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமை நகரமாக்க ஒன்றுபட்டு செயல்படுவோம் என்றார். நிகழ்வில், நகர மன்ற உறுப்பினர்கள் பொ. பக்கிரிச்செல்வம், மாரியப்பன், தேவேந்திரன், ஜெகபர் நாச்சியா,கஸ்தூரி, சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார், மேற்பார்வையாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT