திருவாரூர்

ஆனிக் காா்த்திகை:முருகனுக்கு சிறப்பு வழிபாடு

25th Jun 2022 09:55 PM

ADVERTISEMENT

ஆனிக் காா்த்திகையையொட்டி, திருவாரூா் கீழவீதியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவா் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பழனியாண்டவருக்கு அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிா்தம், தேன், 501 லிட்டா் பால், தயிா், கரும்புச் சாறு, எலுமிச்சை சாறு, இளநீா், விபூதி, சந்தனம், பன்னீா் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பழனி ஆண்டவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, அலங்காரதீபம், பஞ்சாட்சரதீபம் காட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில், ஏராளமானோா் பங்கேற்று பழனி ஆண்டவரை வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT