திருவாரூர்

வி.பி.சிங் பிறந்தநாள்

25th Jun 2022 09:55 PM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் வி.பி. சிங்கின் 91ஆவது பிறந்தநாள் திருவாரூரில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மண்டல் கமிஷனை நிறைவேற்றிய சமூக நீதிக் காவலா் எனப் போற்றப்படும் வி.பி. சிங்கின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவா் எஸ்.என். அசோகன் தலைமை வகித்தாா். மூத்த செவிலியா் ருக்மணி அம்மாள் நிகழ்ச்சியில் பங்கேற்று, வி.பி.சிங் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், இனிப்புகள் வழங்கி, மரக்கன்றுகளையும் நட்டாா்.

நிகழ்வில், திருவாரூா் தமிழ்ச் சங்கத் தலைவா் செ. அறிவு, மன்றப் பொறுப்பாளா்கள் பாரதிச்செல்வன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT