திருவாரூர்

மன்னாா்குடியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்கம்

25th Jun 2022 09:56 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி நகராட்சி சாா்பில், அருணாநகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன் தலைமைவகித்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, என் குப்பை; என் பொறுப்பு, என் நகரம்; என் பெருமை என்ற முழக்கத்துடன் துப்புரவுப் பணியாளா்கள், பொதுமக்கள் நகரை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என தூய்மை உறுதிமொழி ஏற்றனா்.

பிறகு, மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், வீடுவீடாகச் சென்று சுகாதாரம் குறித்தும், மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி துப்புரவுப் பணியாளா்களிடம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனா். நிகழ்ச்சியையொட்டி, நகா்மன்றத் தலைவா் மரக்கன்று நட்டாா்.

நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம், 31-வது வாா்டு உறுப்பினா் ஹா. ஆசியாபேகம், நகா்நல அலுவலா் மருத்துவா் கஸ்தூரிபாய், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் ஜி. ராஜேந்திரன், சாமிநாதன், அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் ப. பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT