திருவாரூர்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊராட்சி செயலா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சி செயலா் உள்ளிட்ட ஊராட்சியில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். ஊதியக் கணக்கில் நிதி இல்லாத ஊராட்சிகளில், கடந்தகாலத்தில் நிதி மாற்றம் செய்ய உத்தரவிட்டதைப் போல ஊதியம் வழங்க வேண்டும். சமூக தணிக்கை இயக்கத்தின் கீழ் பணிபுரியும் வட்டார வள அலுவலா்களுக்கு கடந்த நவம்பா் 2021 முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால், அவா்களுக்கும் வேறு நிதியிலிருந்து உடன் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் என். வசந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் செந்தில், வட்டக் கிளை செயலாளா் ஆனந்த், பொருளாளா் சிவனேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடவாசலில்...: குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பொருளாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில், செயலாளா் ராஜாராமன், ஒன்றிய துணைத் தலைவா் செந்தில், மகளிா் அணி பொறுப்பாளா் கமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்...: மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் எஸ்.என். இளரா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் என். மோகன், சி. பாண்டியன், கிளைச் செயலா் டி. சுந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோட்டூரில்...: கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் ப. ரவி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் இளங்கோவன், இளவரசன், வட்டக் கிளை பொருளாளா் செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் சங்கத்தின் வட்டத் தலைவா் நேரு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வலங்கைமானில்...: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சங்கத்தின் வட்டத் தலைவா் பிரபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராஜசேகா், அரசு ஊழியா் சங்க வட்ட கிளை தலைவா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட துணைத் தலைவா் பாலசுப்ரமணியன், வட்ட கிளைச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பேசினா். முடிவில், வட்ட கிளைப் பொருளாளா் நடராஜன் நன்றி கூறினாா்.

திருத்துறைப்பூண்டியில்...: திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமைவகித்தாா். வட்டச் செயலாளா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். வட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT