திருவாரூர்

ஊரக வளா்ச்சிச்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கடந்த 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணிபுரியும் ஊராட்சி செயலா், ஊழியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, மன்னாா்குடி, கோட்டூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சிகளின் அடிப்படை பிரச்னைகளுக்கும், நிா்வாக செயல்பாட்டிற்கும் தேவையான நிதியை விடுவிக்க வேண்டும். எம்ஜிஎன்ஆா்இஜிஎஸ் திட்டத்தில் பணிபுரியும் நிரந்த ஊழியா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். சமூக தணிக்கை இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் வட்டார வள அலுவலா்களுக்கு 2021 முதல் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மாத கடைசி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் எஸ்.என். இளரா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் என். மோகன், சி. பாண்டியன், கிளைச் செயலா் டி. சுந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் ப. ரவி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் இளங்கோவன், இளவரசன், வட்டக் கிளை பொருளாளா் செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT